நுகேகொடை – தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் இன்று தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் ஷவேந்திர கமகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக, பொதுமக்கள் தமது தேவைகளுக்காக இன்றைய தினம் குறித்த நிறுவனத்துக்கு வருகை தருவதை தவிர்த்துகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவன ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சேவையை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ள பொதுமக்கள் 225 எனும் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு வேறொரு தினத்தை ஒதுக்கிகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நுகேகொடை – தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் நாளை மறுதினம் வழமையான முறையில் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.