திருமலை நகர லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் திருமலை லியோ கழகமும் இணைந்து நேற்று புதன்கிழமை திருகோணமலை கடற்கரைப்பகுதியில் துப்புரவு பணிகளை மேற்கொண்டிருந்தகனர்.
காலை 6 மணி முதல் 8.30 மணிவரை இடம்பெற்ற இந்த சிரமதான பணியில் திருமலை லியோ கழகம் மற்றும் லயன் கழகம் ஆகியவற்றை சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு தமது பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த கழகத்தின் முன்னாள் நகர ஆளுநர் லயன் பி.ஜனரஞ்சன் ( MAF,MJF,Jp) திருகோணமலை நகர லயன்ஸ் கழகமானது இதுவரை இதுபோன்ற பல சிரமதானங்களை செய்துள்ளதாகவும், இன்னும் பல விடயம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், இவ்வாறான சேவைகளை முன்னெடுப்பதற்கு துடிப்புள்ள இளைஞர் யுவதஜிகளை திருமலை லியோ கழகத்தில் இணைந்து செயற்படுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை, இந்த துப்பரவாக்கல் பணிக்கு திருகோணமலை நகர சபை பிதா அவர்கள் வாகன வசதியும் ஊழியர்களையும் தந்துதவியமைக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இவ்வாறான செயல்களினால் திருகோணமலையை ஒரு சுத்தமான நகரமாக பேணி பாதுகாக்க முடியுமென்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




