திருக்கோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் மணல் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் உளவு இயந்திரத்துடன் சந்தேகநபர்கள் இரண்டு பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (07) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மொரவெவ-பத்தாம் கட்டை பகுதியில் மணல் ஏற்றுவதற்காக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் வழங்கப்பட்ட அனுமதியை மீறி இரவு நேரத்தில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது இரண்டு சந்தேக நபர்களுடன் உழவு இயந்திரத்தையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 2 பேரையும் இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இவர்கள் தொடர்பில் முன் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.