திருகோணமலை மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற அறுபத்தேழு நபர்களிடம் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையினரும் – பொலிஸாரும் பொதுமக்கள் வழங்கிய இரசகிய தகவலுக்கமைவாக திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை அறுபத்தேழு நபர்களை கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து 34 லட்சத்து 37 ஆயிரத்து 559 ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளதாகவும் பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையில் அனுமதியை பெறாமல் திருட்டு தனமாக கொக்கை மூலமாகவும் மின்சார சபையினால் பொறுத்தப்பட்டிருக்கின்ற மீட்டர் இயந்திரத்திற்குள் மோசடி செய்யும் வகையில் புதிய கம்பிகளை பொறுத்தியும் மின்சாரத்தை பெற்று அதனை பாவிக்காமல் திருட்டு தனமாக மின்கம்பியினை பொறுத்தி மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டின் பேரிலும் பல திருட்டுக்களுடன் தொடர்புடையவர்களுக்கே இத்தண்டம் அறவிடப்பட்டுள்ளதாகவும் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இதனடிப்படையில் மூதூர் – சம்பூர் – மொறவெவ மற்றும் புல்மோட்டை பகுதிகளிலேயே அதிகளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.