வரலாற்று சிறப்புமிக்கதும், கிழக்கலங்கையின் தொன்மைமிகு கோவிலுமாக விளங்கும் சின்னக் கதிர்காமம் என்றழைக்கப்படும் திருகோணமலை வெருகலம்பதிசிறி சித்திர வேலாயுத சுவாமி தேவஷ்தானத்தின் வருடாந்த மகோற்சவம் 08/09/2021 இடம்பெறவிருந்த நிலையில் கொரோனா தொற்று நிலமை காரணமாக இவ்வருட மகோற்சவம் நடைபெறமாட்டாதென கோயில் நிருவாகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இவ் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோட்சவத்தில் நாட்டின் பல பாகங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் ஒவ்வொரு வருடமும் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.