திருகோணமலை-அலஸ்தோட்டம் பகுதியில் சடலம் ஒன்றை புதைப்பதற்காக மயானத்தில் குளியொன்றினை தோண்டிக் கொண்டிருந்தபோது ஆயுதங்கள் சில கண்டெடுக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உப்புவெளி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை அலஸ்தோட்டம் பகுதியில் சடலமொன்றினை புதைப்பதற்காக குழி தோண்டிக் கொண்டிருந்த வேளை கேன் ஒன்று மீட்டெடுக்கப்பட்டதாகவும், கேனை திறந்து பார்த்தபோது ஆயுதங்கள் சிலவற்றை கண்டதாகவும் பிரேதசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
அதனை அடுத்து பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியமையை தொடர்ந்து அடுத்து போலீசார் அங்கு குவிந்ததாகவும் இதேவேளை அதிலிருந்து சில ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட ஆயுதங்கள், ஏ பீ 2 – 05, எஸ். எஸ். எம். ஜீ. 01, டி 56 துப்பாக்கி ரவைகள் 1700 மற்றும் 9 எம். எம் துப்பாக்கி ரவைகள் 33, டி 56 மகசின் 15 எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.