மின்னேரியாவில் மீட்கப்பட்ட எலும்புக்கூட்டை, உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
திருகோணமலை கடற்படை தளத்தில் பணியாற்றி காணாமல் போன இளைஞரின் எலும்புக்கூடே அது. கடந்த ஜனவரி மாதம் இந்த இளைஞர் காணாமல் போயிருந்தார்.
இறந்தவர் ஹங்குரங்கெத்தவை சேர்ந்த மாலித குமார விபுலசிறி (27) என அடையாளம் காணப்பட்டது.
திருகோணமலை கடற்படை தளத்தில் பணியாற்றி வந்த இந்த இளைஞர் விட்டிலிருந்து பணிக்கு புறப்பட்ட பின்னர் கடற்படை தளத்திற்கு செல்லவில்லை. வீட்டிற்கும் திரும்பவில்லை.
இதையடுத்து, ஹங்குரங்கெத்த பொலிஸ் நிலையத்தில் உறவினர்கள் முறைப்பாடு செய்தனர். இந்த நிலையில் மின்னேரிய பகுதியில் மீட்கப்பட்ட எலும்புக்கூட்டிற்கு அருகிலிருந்த தொலைபேசியின் மூலம், இறந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலதிக ஆய்விற்காக எலும்புக்கூடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.