திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்டுப்பகுதியில் கட்டு துவக்கு வெடித்ததில் நபரொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஹொரவபொத்தான-மொரவேவ பகுதியைச் சேர்ந்த சந்தன குமார 30 வயது என அங்கிருந்து வரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தேன் எடுப்பதற்காக மூன்று பேர் சென்றபோது கட்டு துவக்கு வெடித்து படுகாயமடைந்த நிலையில் காட்டிலிருந்து பிரதான வீதிக்கு கொண்டு வந்து 1990 அம்பியூலன்ஸ் சேவையின் உதவியுடன் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.