திருகோணமலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 5 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளார்.
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இரண்டு பேரும், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர் உள்ளடங்களாக 5 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது.