திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கந்தளாய் போக்குவரத்துச்சபைக்குரிய பேருந்து இன்று(23/08) காலை ஹபரண திகம்பத்தான பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளது.
எதிர்திசையில் வந்த வானுடன் குறித்த பேரூந்து மோதியமையினாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் சிக்கி சுமார் 22பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் அருகிலுள்ள தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.