திருகோணமலை பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபராக இன்று (25) பீ. ஆர். எஸ். ஆர். நாகாமுல்ல தமது கடமைகளை பொறுப்பேற்றார்.
இவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் அனைத்து பொலிஸ் பொறுப்பதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பொலிஸாரின் மரியாதை அணிவகுப்பும் இடம்பெற்றது.