திருகோணமலை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று இரவு 8.15 மணியளவில் குறித்த கைதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு 12, மேமன் லேன் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஜே.ஏ.டி.ஜெகத் சிந்தக்க என்பவரே உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர் தொடர்பில் தெரியவருவதாவது, ஹெரோயின் வைத்திருந்தார் என்ற குற்றத்திற்காகவே இவர் சிறையில் வைக்கப்பட்டிருந்ததாகவும், குறித்த கைதிக்கு 6500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்த நிலையில் அத்தொகையை செலுத்த முடியாத காரணத்தினால் மூன்று மாதம் சிறைதண்டனை அனுபவித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இவர் உயிரழந்துள்ளதாகவும், சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சடலத்தினை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.