ஜம்முவில் 144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளதை தொடர்ந்து அங்குள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று (சனிக்கிழமை) திறக்கப்பட்டுள்ளன.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜம்மு- காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமென மத்திய அரசு அறிவித்தமையை தொடர்ந்து ஜம்முவில் 144 உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ஆவது சட்டப்பிரிவின் சரத்துகளை மத்திய அரசு அதிரடியாக இரத்து செய்தது.
அதேபோன்று காஷ்மீரை ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு தனித்தனி யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவும் மசோதா நிறைவேற்றப்பட்டு, அதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.