ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 3.
இந்தநிகழ்ச்சியில் அடுத்து வெளியேறப்போவது யார் என்பது தொடர்பில் எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது குறித்த தொலைக்காட்சியில் இது தொடர்பிலான ப்ரோமோ காணொளி வெளியாகியுள்ளது.
அதில் அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கும்படி மதுமிதா வெளியேறுகிறார் என்பது போன்று ஒளிபரப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவர் தற்கொலைக்கு முயன்றமையினாலேயே வெளியேற்றப்பட்டிருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாற்கு அந்த ப்ரோமோவில் மதுமிதாவின் கையில் கட்டப்பட்டிருக்கும் வெள்ளைத்துணியை எடுத்துக்காட்டுகின்றனர் நெட்டிசன்கள்.
இது தற்போது வைரலாகி வருகிறது.இதேவேளை கடந்த சில வாரங்களாக மதுமிதா நல்ல பெயரை பெற்ற போதிலும், தற்போது மீண்டும் வந்துள்ள வனிதாவின் பேச்சைக் கேட்டு மக்கள் மத்தியில் தனக்கு இருந்த நல்ல பெயரை கெடுத்துக்கொண்டதாக வலைத்தளவாசிகள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.