கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தில் தற்காலிகமாக கடமையாற்றிய ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (17) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வாவினால் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக தற்காலிகமாக கடமையாற்றி வந்தவர்களுக்கே இந்நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் ”
கிழக்கில் நியமனங்கள் வழங்கும் போது யாருக்கும் நியாயமற்ற விதத்தில் எவ்வித நியமனங்களும் வழங்குவதற்கு இடமளிக்க மாட்டேன். ஜனாதிபதி என்னை கிழக்கின் முதல்வராக கிழக்கு மாகாண ஆளுநராக நியமித்தமை என்னை நம்பியதால் மாத்திரமே!
ஜனாதிபதி என்னை எவ்வாறு நம்பி கிழக்கு மக்களுக்கு சிறந்த அபிவிருத்தியை வழங்குவதற்காக அனுப்பி வைத்தாரோ அதைப்போல் நம்பிக்கையாக மக்களுக்கு எவ்வித இன மத பாகுபாடின்றி சேவையாற்றுவேன் தொழில் வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுப்பேன்.
ஆகவே நீங்கள் வீதி அதிகார சபையில் நியமனம் பெற்றுள்ளீர்கள். நீங்கள் செய்கின்ற சேவை மிகவும் அளப்பெரியது. சேவையில் இனப் பாகுபாடு காட்டக் கூடாது நாம் அனைவரும் நாட்டிற்கும் மக்களுக்கும் சிறந்த சேவையாளராக மாற வேண்டும். அத்துடன் நியமனங்களை பெற்று சிறந்த சேவைகளை வழங்குவீர்கள் என நான் நம்புகின்றேன் என தெரிவித்தார்.