நாட்டிலுள்ள அனைத்து மிருகக்காட்சி சாலைகளும் இன்று வியாழக்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
தேசிய மிருகக்காட்சி சாலைகள் தொடர்பான பணிப்பாளருக்கு எதிராக ஊழியர்களால் பணிநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமையின் காரணத்தினாலேயெ இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு – தெஹிவளையிலுள்ள தேசிய மிருகக்காட்சிசாலைக்கு முன்பாக இன்று காலை ஊழியர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.