தமிழ் அரசியல்வாதிகளும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் கிழக்கு மக்களை ஏமாற்றுவதே நிதர்சனமான உண்மையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையை தளமாக கொண்டு இயங்கும் ஊடகமொன்றின் நிகழ்ச்சியொன்றிற்கு தொலைபேசியினூடாக வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கில் இணக்க அரசியல் என்ற போர்வையில் தஞ்சமடைந்த அரசியலையே மேற்கொண்டு வருகின்றதாக தெரிவித்துள்ளார்.
நாங்கள் இணக்க அரசியல் என கூறுகின்றோம், அவர்கள் தங்களுடைய இராஜதந்திரம் என்பதுடன் மாகாணத்தை ஆட்டிப்படைப்போம் என்கின்றனர்.என தெரிவித்துள்ளார்.
அத்துடன், இங்கு ஏமாறுவது மக்களே. தமிழ் அரசியல்வாதிகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஏமாறவில்லை. அவர்கள் இருவரும் தமிழ் மக்களையே ஏமாற்றுகின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.