தமிழகத்துக்கும் தெலுங்கானாவுக்கும் இடையில் பாலமாக செயற்படுவேனென தெலுங்கானவிற்கான புதிய ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை சென்னை தியாகராயர் நகரில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “ஆளுநர் பதவி என்பது கட்சி எனக்கு அளித்து இருக்கும் அங்கீகாரம். இந்த பதவியை பெற்றதை தொடர்ந்து உறவிற்கான அங்கீகாரத்தை அனைத்து தரப்பினரும் வழங்கி வருகிறார்கள். அனைத்து கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள், பொதுமக்கள் என அனைவரும் என் மீது கொண்டுள்ள அன்பும், ஆதரவும் நெகிழ வைக்கிறது.
என்னை பொறுத்தவரை தமிழகத்துக்கு வளர்ச்சியை தர பணியாற்ற வேண்டியது எனது உரிமை. அதேபோல தெலுங்கானா மக்களுக்காக பணியாற்ற வேண்டியது எனது கடமை. இரண்டு மாநிலங்களுக்கும் இடையே பாலமாக செயற்படுவேன்” என குறிப்பிட்டுள்ளார்.