தமிழ் பிரதிநிதிகளுக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவேண்டும் என்ற எண்ணம் உண்மையைில் கிடையாது என ஈ.பி.டி..யின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா விமர்சினத்தை முன்வைத்துள்ளார்.
அத்துடன், இதனை தமிழர்கள் உணர்ந்துகொண்டு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்கள் இதனை உணர்ந்து செயற்பட வேண்டும் என தெரிவித்ததுடன், இனியும் சுயலாப அரசியல் தலைமைகளுக்கு பின் செல்ல வேண்டாம் என்றும் அவர்களுக்கு பின்னால் சென்றால் மீண்டும் துன்பத்தையே சந்திக்க நேரிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.