பயங்கரவாதிகள் குறித்த எச்சரிக்கையைத் தொடர்ந்து கோவையில் இரண்டாவது நாளாகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நகரின் முக்கிய இடங்களான வழிபாட்டுத்தலங்கள், ரயில், பேருந்து நிலையங்கள், வணிகவளாகங்களில் பொலிஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி நாடளாவிய ரீதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில் கோவையில் லக்ஷர் இ தொய்பா அமைப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. அத்தோடு ஆறு பயங்கரவாதிகள் நகருக்குள் ஊடுருவி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து கோவை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.