திருகோணமலை-ரொட்டவெவ பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் ஊரடங்கு சட்டத்தை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை கைதுசெய்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை- மொரவெவ பொலிஸார், விமானப்படை உத்தியோகத்தர்கள், விஷேட பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போது சூதாடிய குற்றச்சாட்டின் பேரில் 10 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மொரவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி வசந்த சந்ரலாலின் ஆலோசனைக்கு அமைவாக குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதீப் உட்பட PS 2646 திசாநாயக்க PS 5069 மனோஜ் PS 61729 நிரோஷன PS 72415 ரத்னாயக்க PSD 33601 உத்திக PSD 88962 பிரசங்க ஆகியோர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இன்றிரவு (03) 9.00 மணியளவில் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த 35 வயது தொடக்கம் 55 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் எனவும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் ஊரடங்கு சட்டத்தை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த சாட்டின் பேரில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் 10 பேரையும் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.