சவுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை பணிப்பெண்கள் 15 பேர் உடனடியாக நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சேவைக்காலம் நிறைவடைந்ததும், தொழில் வழங்குநர்களால் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சவுதியிலுள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டில் குறித்த பணிப்பெண்கள் நாட்டிற்கு மீள அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்த பணிப்பெண்களுக்கு 1,90,82,000 ரூபா இழப்பீடு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிற்கு தொழிலுக்கு செல்வதற்கு முன்னர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்தமை காரணமாகவே பணியாளர்களுக்கான இழப்பீட்டை பெற்றுக்கொடுக்க முடிந்ததாக பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.