நாட்டில் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் கொவிட் வைரஸ் மீண்டும் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுக்கின்றது.
நாட்டில் கொவிட் பரவல் தற்போதும் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, டிசம்பர் மாதத்தில் கொவிட் தொற்று பரவுவதற்கான அபாயம் காணப்படுவதாக கொழும்பு ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் டொக்டர் தீபால் பெரேராவும் எச்சரிக்கை விடுக்கின்றார்.
பொதுமக்கள், சிறுவர்களை வெளியில் அழைத்து செல்வதனை இயலுமானளவு தவிர்க்குமாறு அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
இதேவேளை, சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளுக்கு செல்லும் போது, கொவிட் தடுப்பூசி அட்டைகளை கொண்டு செல்ல வேண்டும் என அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றார்.