ஜனாதிபதி தேர்தல் குறித்த பேச்சுவார்த்தையின் இறுதியில் வேட்பாளர் மாறலாம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.
தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றுக்கு இடம்பெறும் பேச்சுவார்த்தை நிறைவடையும்போது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக இல்லாமல் போவதற்கும் சந்தர்ப்பம் உள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வந்தாலும், சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கோட்டாவிற்கு எதிரான கருத்துக்களையே வெளியிட்டு வருகின்றார்.
இந்தநிலையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.