கம்போடியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அந்நாட்டின் விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
நான்கு நாட்கள் அரச முறை பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தூதுக்குழுவும் இன்று காலை கம்போடியாவிற்கு புறப்பட்டுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கம்போடிய மன்னர் நொரொடோம் சிகாமணியின் அழைப்பின் பேரில் நொம்பென்னுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதிக்கு மன்னரின் அரச மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கம்போடிய பிரதமர் ஹூன் சென்னுடன் இருதரப்பு பேச்சுக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், ஜனாதிபதியின் இந்த பயணத்தின்போது, அவர், அங்கோர் புராதன பூங்காவில் உள்ள பௌத்த ஆலயங்களுக்கும் செல்லவுள்ளனர்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வரவேற்கும் பதாதைகள் நொம்பென்னில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
