இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான அயத்தங்களை தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய, இம்முறை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலுக்கு நாடளாவிய ரீதியில் 14 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் 2018ம் ஆண்டு வாக்காளர் இடாப்பினை வைத்து இடம்பெறவுள்ளது.
இதேவேளை, தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை ஆணைக்குழு ஆரம்பித்திருப்பதாக இது தொடர்பிலான தகவல்களை அளித்த அதிகாரிகள் ஒருவர் குறிப்பிட்டார்.