எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க போட்டியிடவுள்ளதாக மீண்டும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தேசிய மக்கள் இயக்கம் இதற்கான ஏற்பாடுகளையும், பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்து வருகின்றது.
இதுதொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதியிடம் வினவியபோது, நாட்டில் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு தாமும் தயார் என்று பதிலளித்தார்.
காலம் தகுந்த பதிலை வழங்கும் என்று குறிப்பிட்ட ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க, அதற்கு ஒத்துழைக்க தயார் என்று கூறினார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.