எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடவுள்ளதாக ஐக்கிய சோஷலிசக் கட்சியின் தலைவரான சிறிதுங்க ஜயசூரிய அறிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
தற்போது பிரதான கட்சிகளினால் முன்நிறுத்தப்பட்டுள்ள எந்தவொரு வேட்பாளருக்கும் பெருந்தோட்டத்தை தொடக்கம் வடக்கு,கிழக்கு வரையுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வைவழங்க முடியாது என்றும் அவர் கூறினார்.
