ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்சவுக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான குமார வெல்கம இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
நேற்று காலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த சந்தேகத்தினை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் நவம்பர் 07ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், இதுவரையிலும் கோட்டாபய ராஜபக்ச தனது இரட்டை பிரஜாவுரிமையை நீக்கியதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட ஆயத்தமாக உள்ளதாக அறிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, அதற்கான கோரிக்கையை கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்வைத்திருப்பதாகவும், ஆனால் இதுவரை உறுதியான பதில் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.