பௌத்தத்திற்கு முதலிடம் என்ற நிபந்தனையின்றி ஒற்றையாட்சி குறித்து திறந்த மனதோடு பேசுவதாக ஜனாதிபதி வேட்பாளர்கள் தெரிவித்தால், ஜனாதிபதி தேர்தல் களத்திலிருந்தே தான் வெளியேறத் தயார் என்று தமிழ்த் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை நிறுத்துவோம், காணி விடுவிப்பு, அரசியல் கைதி விடுதலை காணாமலாக்கப்கட்டோர் விடயத்தில் தீர்வு வழங்குவொம் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், 13 ஆம் சீர்திருத்தச் சட்டத்திற்கு அமைவாக பொலிஸ்- காணி அதிகாரங்களை முழுமையாக விடுவிக்க ஜனாதிபதி வேட்பாளர் யாரும் தயாரா? நான் வந்தால் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவேன் என கூறியுள்ளார்.
ஒற்றையாட்சியை பௌத்தத்திற்கு முதலிடம் என்ற நிபந்தனையின்றி திறந்த மனதோடு பேச ஆரம்பிப்போமென கூறுங்கள். அந்த அறிவிப்பு வெளியாகியவுடன் நான் போட்டியிலிருந்து விலகிக்கொள்கிறேன்” என மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.