அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராகப் பெயரிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பின்வரிசை உறுப்பினர்களின் கூட்டத்திலேயே இவ்வாறு ஏகமானதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பின்வரிசை உறுப்பினரகளின் கூட்டம் நடைபெற்றிருந்தது.
இக்கூட்டத்தில் தங்களது தீர்மானம் குறித்து ஒப்பமிடப்பட்ட கடிதத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தற்போது நாடுமுழுவதும் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகின்ற நிலையில், பிரதான கட்சிகளுக்கிடையில் வேட்பாளர் தொடர்பாக கடும் போட்டியும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுஜன பெரமுன சார்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், ஐ.தே.க. சார்பில் சஜித் பிரேமதாசவுக்கு அதிகளவில் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.