திருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதி மஹதிவுல்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஹொரவ்பொத்தான பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் அதே வழியாக வந்த சொகுசு காரொன்று விகாரைக்கு செல்வதற்காக திரும்பிய மோட்டார் சைக்கிளுடன் மோதியதனாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மஹதிவுல்வெவ – சமகிபுர பகுதியைச் சேர்ந்த ஏ. குலதுங்க (71வயது) என்பவர் படுகாயமடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய காரின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.