செயற்கை நீர் வீழ்ச்சியுடன் கூடிய பதிய கண்ணாடிப்பாலம் சீனாவில் மக்கள் பவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்திலுள்ள கிங்யுவான் நகரில் 368 மீட்டர் நீளத்தில் குறித்த பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தரையில் இருந்து 1,640 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் மீது நடந்துசென்று ஆழமான பள்ளத்தாக்குகளையும், இயற்கையாக சூழ்ந்துள்ள மலைகளையும் ரசிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ள குறித்த கண்ணாடி பாலத்திற்கு அடியில் செயற்கை நீர் வீழ்ச்சியும் அமைக்கப்பட்டுள்ளது.
சீன மொழியில் ‘சொர்க்கத்தின் கதவுகள்’ என வர்ணிக்கப்படும் இந்த பாலத்தில், சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் நடந்து செல்வதுடன், இயற்கை அழகை ரசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

