ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனித்து போட்டியிட்டால்தான் வெற்றியீட்ட முடியும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், மஹிந்த அணியிலிருந்து வெளியேறியவருமான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டணி அமைப்பதற்கான பேச்சு நடத்திவருகிறது.
இந்நிலையில் பொதுஜன முன்னணிக்கு ஆதரவளிக்காமல், எதிர்வரும் தேர்தலில் சுதந்திரக் கட்சி தனித்துதான் போட்டியிட வேண்டும் என்று குமார வெல்கம எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்டபோது அவர் இதனைக் கூறினார்.
பொதுஜன முன்னணியுடன் மைத்திரி அணி கூட்டணி அமைப்பதை தன்னால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.