மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் ஏப்பிரல் 21 உயிர்த ஞாயிறு குண்டுதாக்குலில் உயிரிழந்தவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் இன்று புதன்கிழமை (21) மட்டக்களப்பு காந்திபூங்காவில் அமைக்கப்பட்ட நினைவு தூபியில் மட்டு மாநகரசபை ஆணையாளர் மற்றும் உறுப்பினர்கள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் காந்தி பூங்காவில் அமைக்கப்பட்ட நினைவு தூபியில் இன்று காலை 7 மணிக்கு மாநகரசபை ஆணையாளர் தயாபரன் மற்றும் மாநகரசபை மாநகரசபை உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
குறித்த தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுதாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 70 மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் இந்த குண்டுதாக்குதல் இடம்பெற்று இன்று இரண்டும் ஆண்டு நினைவு தினம் என்பது குறிப்பிடத்தக்கது

