இலங்கை சிறைச்சாலையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் சிலரை படுகொலை செய்வதற்கு பாகிஸ்தானிலுள்ள பாதாள உலகக் கும்பல் முயற்சித்து வருகின்றது என அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் கடத்தல்காரர்களில் முக்கிய புள்ளிகள் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
புலனாய்வுப் பிரிவுக்கு சிறைச்சாலையில் உள்ள போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கைதிகளிடம் இருந்து தகவல்கள் போயிருக்கலாம் என்ற சந்தேகம் பாகிஸ்தான் பாதாள உலகக் குழுவினருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனடிப்படையிலேயே பாகிஸ்தானிலிருந்து இலங்கை வந்து இங்குள்ள சிறைக்குள் நுழைந்து சம்பந்தப்பட்ட கைதிகளைப் படுகொலை செய்வது குறித்த திட்டம் அம்பலமாகியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து விசேட அதிரடிப் படையினரால் விசேட புலனாய்வு அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.