சிம்பாவேயின் முன்னாள் ஜனாதிபதியும், மற்றும் முன்னாள் பிரதமருமான ரொபர்ட் முகாபே தனது 95 ஆவத உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை அவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிம்பாப்வேயில் நீண்ட காலமாக ஜனாதிபதியாக பதவி வகித்த அவருக்கு பதவி விலகுவதற்கு 2017ஆம் ஆண்டில் கடும் அழுத்தம் கொடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களையும் அவர் சந்தித்திருந்தார்.
ரொபர்ட் முகாபே 1980களில் பிரதமராகவும், 1987ஆம் ஆண்டில் முதலாவது சந்தர்ப்பமாக ஜனாதிபதியாகவும் பதவிவகித்தார்.
பின்னர் அந்த நாட்டை இராணுவம் கைப்பற்றி பெரும் பிரச்சினைக்கு மத்தியில் சிம்பாப்வே அரசு சென்றது.
அந்நாட்டில் வெள்ளையின சிறுபான்மையினரின் ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது முதற் கொண்டு ரொபேர்ட் முகாபே சிம்பாப்வேயின் ஆட்சி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.