இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாப்பிடுவதற்கு லட்டுக்களை மட்டுமே அளித்தமையினால் விரக்தி அடைந்த மனைவி மீது அதிருப்தி அடைந்த கணவர் விவகாரத்து கோரியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரூட் மாவட்டத்தில் வாழும் தம்பதி ஒருவர்களுக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகியுள்ளதுடன் இவர்களுக்கு மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில், அண்மையில் கணவருக்கு சிறிய நோய் ஏற்பட்டமையையடுத்து கணவர் சற்று அவதிபட்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது மனைவி ஒரு தாந்திரிகரிடம் சென்று தனது கணவரின் நிலை குறித்து கூறியுள்ளார்
அதற்கு அந்தத் தாந்திரிகர் மனைவியிடம் கணவருக்கு சாப்பிட காலை மற்றும் இரவு ஆகிய இரு வேளைகளிலும் லட்டுகளை மட்டுமே கொடுக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கணவருக்கு மனைவி சாப்பிட காலையில் நான்கு லட்டுகளும் இரவில் நான்கு லட்டுகளும் வழங்கியுள்ளார். இதற்கு இடையில் சாப்பிட எதுவுமே கொடுக்கவில்லை.
இந்நிலையில் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து தரக் கோரி கணவர் குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இதற்கு காரணம் அவர் சாப்பிட வெறும் லட்டு மட்டுமே தருகிறார் எனக் கூறியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனுவை பார்த்த ஆலோசனை வழங்கும் அதிகாரிகளும் மிகவும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.