பயங்கரவாதி சஹ்ரானுடன் தொடர்புடையதாகத் தெரிவித்து 16 வயதான சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்தின் சஹரானுக்கு அடுத்தநிலை தலைவரான நௌபர் மௌலவியின் மகனான நௌபர் அப்துல்லா என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குருநாகல், ஹெக்குனுகொல்ல பகுதியைச் சேர்ந்த இவர் அம்பாறை புறநகர் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
தீவிரவாதி சஹரானினால் நுவரெலியாவில் நடத்தப்பட்ட பயிற்சியளிப்பு நடவடிக்கையில் இணைந்துகொண்டு பயிற்சி பெற்றுக்கொண்டதாக இவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.