உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமின் ஆதரவாளர்கள் மூவர் அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
அரச புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
அத்தோடு குறித்த மூவரும் JMI பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களென்றும் அவர்கள் சஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சி பெற்றவர்களென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.