திருகோணமலையில் இன்று மாலை கத்தி வெட்டு தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை 3 ஆம் கட்டைப்பகுதியில் அமைந்துள்ள பலசரக்குக்கடையொன்றிற்கு அருகாமையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் கிரி என்பவரே காயத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், சிவகரன் என்பவர் தாக்குதலை மேற்கொண்ட விட்டு தப்பித்து சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் நீல நிற முச்சக்கரவண்டியில் வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றமை கவனிக்கத்தக்கது.
நேற்று இரவு குடி போதையில் ஏற்பட்ட சர்ச்சையின் தொடர்ச்சியே இந்த வெட்டுச் சம்பவத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விபரங்களுக்கு எமது இணையத்தளத்துடன் இணைந்திருங்கள்.