இலங்கையின் இராணுவத்தளபதியாக சவேந்திர டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம்(18) இராணுவ தளபதி மஹேஷ் சேனநாயக்க ஓய்வு பெற்றதை அடுத்தே புதிய தளபதியாக சவேந்திர டீ சில்வா இன்று நியமிக்கப் பட்டுள்ளார்.
இவர் இராணுவத்தின் 23வது தளபதியாவார்.
யுத்தத்தின் இறுதிக்காலத்தில் 58வது டிவிசனை வழிநடத்திய இவர் மீது கடுமையான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உளளன. சரணடைந்தவர்களை கொன்ற குற்றச்சாட்டும் இவர் மீது யஸ்மின் சூக்கா தலைமையிலான தன்னார்வ அமைப்பினால் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இவரது நியமனம் தமிழ் மக்கள் மத்தியில் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.