இராணுவ சிறப்புப் படைப் பிரிவின் அதிகாரி ஒருவர், பரசூட்டில் இருந்து குதித்த போது, நிலத்தில் வீழ்ந்து மரணமடைந்துள்ளார்.
அம்பாரையிலுள்ள உகண விமானப்படைத் தளத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது.
இலங்கை விமானப்படை விமானத்தில் இருந்து, பரசூட் மூலம் குதிக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறப்புப் படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரே, எதிர்பாராத விதமாக இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சுமார் 7000 அடி உயரத்தில் இருந்து குதித்த இவரின் பரசூட் உரிய நேரத்தில் சரியாக விரியாததால் இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாக பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
