அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலையை தொடர்ந்தே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்மாந்துறை பழைய தியேட்டருக்கு அருகாமையில் இருந்த காணியொன்றில் இந்த கைக்குண்டு மீட்கப்பட்டதாகவும் இனந்தெரியாதவர்களினால் குறித்த குண்டு கைவிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து குறித்த வி்டயம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.