எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துமாறு கோரி வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த சுமார் 250 க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று (04) மாலை 5 மணியளவில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் வருகை தந்து ஆயிரம் தேங்காய்களை உடைத்து வழிபாடு ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவபடுத்துகின்ற மக்கள் சுமார் 250 பேருக்கு மேற்பட்டவர்கள் வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயம் முன்றலில் நேற்று (04) மாலை 5 மணி அளவில் ஒன்று கூடி ஆலயத்தில் ஆயிரம் தேங்காய்களை உடைத்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துமாறு கோரி வழிபாடு ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இங்கு கருத்து தெரிவித்தவர்கள், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடபகுதி மக்களாகிய நாங்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்ப்புடனும் ஆவலுடன் காத்திருக்கும் ஒரே வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளர்களாக அவரது கட்சி நிறுத்த வேண்டும் என்பதுதான், எனது கோரிக்கை அவ்வாறு அவர்கள் நிறுத்த தவறினால் 2005 ஆம் ஆண்டு போன்று தமிழ் மக்கள் ஒரு சூழலை மீண்டும் உருவாவதற்கான வாய்ப்பு உண்டு என தெரிவித்தனர்.