வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவின் அமைச்சின் கீழ் வருகின்ற மத்திய கலாசார நிதியத்தில் 1.2 பில்லியன் ரூபாய் முறைகேடு செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைக்கான குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சஜித் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்க விசாரணையும் ஆரம்பமாகும் என ரணில் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சஜித்துக்கு ஆதரவான நிலைப்பாடு மேலோங்கி வரும் நிலையில் ரணிலின் இந்த அதிரடி நடவடிக்கைகள் ஆரம்பமாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.