இலங்கையின் அடுத்த ஜனாதிபதியை தீர்மானிப்பதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்த தேர்தலில், 40க்கும் அதிகமான வெட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், அநுர குமார திஸாநாயக்க, சஜித் பிரேமதாச மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ ஆகிய மூவருக்கும் இடையில் மும்முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், குறித்த வேட்பாளர்களுக்கு பலர் தமது சொந்த விருப்பத்தின் பெயரில், ஆதரவுகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவின் அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு அமைச்சராக இருந்த முன்னாள் எம்.பி சஜின் வாஸ் குணவர்தன ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து கொண்டுள்ளார்.
காலி அம்பலங்கொடவில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசார மேடையில் சஜின் வாஸ் குணவர்தன கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதன் போது, உயிர் இருக்கும்வரை சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் உறுதியளித்துள்ளார்.