ஐக்கிய தேசிய கட்சியின் வீடமைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதசாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தக் கோரி இன்று மட்டக்களப்பு மாநகரில் பேரணி ஒன்று நடைபெற்றது.
எஸ்.பி.ஜி அணியினரின் ஏற்பாட்டில் இந்த மாபெரும் பேரணி இன்று இடம்பெற்றுள்ளது.
இந்த பேரணியில் அம்பலாந்தோட்ட பா.ம உறுப்பினர் சுபஹ பிரதீப், எஸ்பிஜி அணியின் ஊடக துறை பொறுப்பாளர் மற்றும் அவ்வணியின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.ஜகவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன், சஜித் பிரேமதாசவிற்கு ஆதவராக பலநூற்றுக்கணக்கான மக்களும் இந்த பேரணியில் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச ரீதியிலும் இதற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது கட்சி, தமது சார்பில் கோட்டபாய ராஜபக்ஷவை பிரதம ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளது.
இது தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல்வாதிகளிடமும் சலனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்கு இழுபறிநிலை ஏற்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் உறுப்பினரும், வீடமைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாசிவிற்கான ஆதரவு அதிகரித்து வருகின்றது.
அந்த வகையில் சஜித் பிரேமதசாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தக் கோரி இன்று மட்டக்களப்பு பிரதேசத்தில் மாபெரும் நடைபவனி இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.