முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதித் தேர்தலாக அறிவிக்கின்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய மாநாடு நாளை 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 03 மணிக்கு கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இந்த நிகழ்வுக்குத் தலைமை தாங்கவுள்ளதோடு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் எனப் பலரும் இதில் கலந்துகொள்கின்றனர்.
விசேடமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஒருசில உறுப்பினர்களும் இதற்கு கலந்துகொள்ள திட்டமிட்டிருப்பதாக அறியமுடிகின்றது.
இதேவேளை கடந்த வியாழக்கிழமை வரை இந்த நிகழ்வுக்கு அழைப்பிதழ் கிடைத்திராத தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கு நேற்று மாலையில் அழைப்பிதழ் வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.