ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெறவேண்டும் என்பதற்காக இன்று சனிக்கிழமை விசேட யாக பூஜை நடத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவினால் இந்த யாக பூஜை நடத்தப்பட்டுள்ளது.
ஹப்புத்தளை, ஸ்ரீ கருவேற்காடுபதி அம்மன் கோயிலில் இந்த வழிபாடு இடம்பெற்றுள்ளது.
இதன்போது கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக இறைவனின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இந்தப் பூஜை நடத்தப்பட்டதாக டிலான் பெரேரா கூறியுள்ளார்.
தற்போது சிங்கள மக்கள் மட்டுமல்ல, தமிழ் மக்களும், கோட்டாபய ராஜபகஷ்வின் வெற்றிக்காக முன்வருகின்றனர்.இந்த நிலையில், அவரின் வெற்றி உறுதியானது என டிலான் பெரேரா கூறியுள்ளார்.